அலைகளைப் பார்த்து
அதிசயிக்கிறாயே….
கல் விழுந்ததைக்
கவனித்தாயா?
வானவில் பார்த்து
வருணிக்கிறாயே….
கருத்த மேகத்தைக்
கண்டு கொண்டாயா?
காயைப் பார்த்து
வாயைப் பிளக்கிறாய்…
விதையைப் புதைக்க
விரல் அசைத்தாயா?
விளைவுகள் பார்த்து
வியந்திடும் மனிதா!
காரியம் நடக்கையில்
கவனிக்கப் பழகு.