கருப்பு சிவப்பின்

கருப்பு சிவப்பின்
கவர்ச்சி
ஸ்கேலில்லாமல்
போட்ட கோடு
சுறுசுறுவென நகரும்
மயிர்க்கால்கள்…

எத்தனை பேருக்கு
ரசிக்கத் தோன்றுகிறது
மரவட்டையை,
தூக்கியெறிய
குச்சி தேடாமல்?