நீயும் நானும்

நானொரு வார்த்தை
நீயொரு வார்த்தை
வா
வாழ்க்கையை வார்க்கலாம்
நான் வானம்
நீ நிலா
அட்சரமாய் நட்சத்திரங்கள்
நான் பறை
நீ கை
அடிக்க அடிக்க
அதிரும்
என் பேனா
உன் கைகள்
சேர்ந்து தட்டுவோம்
கவிச்சுரங்கம் திறக்கட்டும்
நீ வானவில்
நான் மேகம்
பொழிவேன் மகிழ்ந்து நனை
நீ உழைப்பாளி
நான் சிப்பி
திறந்து பார்
எல்லாம் ஜொலிக்கும் முத்துக்கள்
நான் பீலி
நீ மனசு
வருடவே வருகிறேன்
நான் சுடர்
நீ காற்று
பற்ற வை
விரட்டுவேன் இருட்டை .
நான் சந்தனக்கின்னம்
நீ சுட்டுவிரல்
தொட்டுவை மணக்கட்டும்
நான் சரவெடி
நீ தீக்குச்சி
உரசு ஊரே அதிரட்டும்
நான் மேளம்
நீ தாளம்
களைகட்டட்டும் கச்சேரி .