வாழ்க்கை ஒரு சதுரங்கம்

வாழ்க்கை ஒரு சதுரங்கம்
நீயுமதில் அங்கம்

ஆனை சேனை குதிரையாய்
ஆட்களுண்டு எங்கும்
வெட்டுப்படும் வேளையைத்
தவிர்ப்பதற்காய்த் தவிப்பதும்
அடுத்தவரை வீழ்த்திட
ஆர்வமாக அலைவதும்

வாழ்க்கை ஒரு சதுரங்கம்
நீயுமதில் அங்கம்.