கவிதைகள்

பிரைடு ரைசும்

பிரைடு ரைசும்
கட்லெட்டும் சொல்லிவிட்டுக்
காத்திருக்கும் பொழுதுகளில்
நினைவுக்கு வருகிறது
அம்மா உருட்டி வைத்த
தயிர்ச் சோறும் மாவடுவும்.

அவரை படரக்

அவரை படரக்
கை கொடுக்கிறது
முருங்கை

அழுக்கைச் சாப்பிட்டுக்
குளத்தைச் சுத்திகரிக்கிறது
மீன்

தன்னையே உருக்கி
ஒளி கொடுக்கிறது
மெழுகுவர்த்தி

இரண்டு தாள்களை
இணைக்கப் பயன்படுகிறது
குண்டூசி

தின்று தீர்க்கிறோம்
வாழ்க்கையை